Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

மறுபிறவி

மீண்டுமொருமுறை
பிறந்தேன் .......
ரோஜா நிற
அழகுடன் ,
பட்டு போல்
மென்மையுடன்,
எனை போல்
இன்னொரு
உயிரை
ஈன்றபோது.......!
கன்னத்து குழியுடன்
என்
கனவு தேவதை
கவிதையாய்
சிரித்ததும்
பத்து திங்கள்
பட்ட கஷ்டமெல்லாம்
பஞ்சாக பறந்ததே.........!