Tamil Kavithai

Tent Hill Queen's Tamil Kavithai

மழைத்துளி

ஒரு நிமிடம்
பெய்த மழைக்கு
எத்தனை
தோற்றங்கள் ......

பளபளக்கும்
வைரமென
புல்லின் மேல் .....
கோலமிட வைத்த
புள்ளியென
மணலின் மேல் ......
வியர்த்து விட்ட
பூக்களும்
உண்டோ என
வியக்கும் படி
பூக்களின் மேல் .......
சொட்டு சொட்டாய்
கண்ணீர் விடும்
இலைகளாக
இலைகளின் மேல் .......
என்
மனதில் தோன்றும்

கவிதையாக .......!

அனைத்தும்

அற்புதமாக .......!