எனக்கேன்
உன் மேல்
இத்தனை மையல்....
எனக்கேன்
உன் மேல்
இத்தனை ஆசை.....
எனக்கேன்
உன் மேல்
இத்தனை காதல்.....
என்ன செய்தாய்
எனை?
அட,
என்ன செய்யவில்லை
எனை?
செய்வது எல்லாம்
நீ........
சருகாய் போவது
நான்.....?
புரியவில்லையா
உனக்கு?
காதலித்து பார்
புரியும்.....
உருக வைக்கும்
காதலால்
உலகில் உயிராய்
பிறந்ததின்
அருமை
தெரியும்....!

0 comments:
Post a Comment