அனைத்தும்
அடங்கி விட்டது
களிப்புடன்
எனை
கண்டு களித்த
பல நூறு
நெஞ்சங்கள்
அடங்கி விட்டன
என்னுள்........!
எனது
நீல நீரலைகள்
இன்று
கண்ணீர்
அலைகளாய்......!
எனக்கு மட்டும்
குரலோசை
கொடுத்து இருந்தால்
ஆக்ரோசமாய் எழுந்த
அலைகளை
முன்பே
சொல்லி இருப்பேன் .........!
ஆனால்
என்னிடம் இருப்பது
அலையோசை
மட்டும் தானே ...................!!
